ADDED : பிப் 13, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: மடுகரை, பனையடிக்குப்பம் கிராமத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மடுகரை, பனையடிக்குப்பம் காலனியில் ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரைநிலைக் கழகம் மூலம், ரூ. 49 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. துணை சபாநாயகர் ராஜவேலு பணியினை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஆதிதிராவிட மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் சிவகுமார், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.