ADDED : பிப் 27, 2024 06:37 AM

புதுச்சேரி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி மில் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பிரசார இயக்கம் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.
முதலியார்பேட்டை தபால் நிலையம் எதிரில் நடந்த நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆவணியப்பன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி., ராமதாஸ் கலந்து கொண்டு பிரசாரத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், கம்யூ., கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் பெருமாள், செயலாளர் சீனுவாசன், பிரபுராஜ், ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், சுதேசி, பாரதி ரோடியர் பஞ்சாலைகளில் ஜவுளிப்பூங்கா அமைக்க வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், உலக நாடு வர்த்தக அமைப்புக்கு சுதேசி மில்லில் இடம் வழங்குவதை நிறுத்த வேண்டும், திருபுவனை கூட்டுறவு பஞ்சாலையை இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இயக்கம் பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
