/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழ் வழியில் பள்ளி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
/
தமிழ் வழியில் பள்ளி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
தமிழ் வழியில் பள்ளி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
தமிழ் வழியில் பள்ளி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
ADDED : பிப் 24, 2024 06:40 AM

புதுச்சேரி : தமிழ் வழி பள்ளியில் பயின்று பட்ட படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
புதுச்சேரி பசுபதி தமிழ் பணி அறக்கட்டளை, 2019ம் ஆண்டு முதல் தமிழ் வழி பள்ளியில் பயின்று பட்ட படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
அதன்படி, அன்னை தெரேசா சுகாதார பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் வழி பள்ளியில் பயின்று பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பசுபதி எழுதிய புத்தகங்களும், உதவித் தொகையும் வழங்கப்பட்டது.
நிறுவனத்தின் புல முதல்வர் ரவிச்சந்திரன் முன்னிலையில் அறக்கட்டளை தலைவர், சுந்தராம்பாள் வழங்கி பாராட்டினார்.
ஏற்பாட்டினை உறுப்பினர்கள் ரவிகண்ணன், முத்துசாமி, ரவிக்குமார், உறுப்பினர் செயலர் திருமுருகன் செய்திருந்தனர்.