/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை உயர்வு
/
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை உயர்வு
ADDED : நவ 05, 2024 06:46 AM
புதுச்சேரி: மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொகை வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார்.
சமூக நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்க வழங்கப்படும் உதவித் தொகை கூடுதலாக ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி கடந்த மாத இறுதியில் அறிவித்தார். அதன்படி உயர்த்தப்பட்ட உதவித் தொகையை பயனாளிகளுக்கு வழங்கும் பணியை நேற்று சட்டசபையில் உள்ள தனது அலுவலகத்தில் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இத்திட்டத்தின் கீழ் மாநிலத்தில் தற்போது உதவித் தொகை பெற்று வரும் 21 ஆயிரத்து 329 மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே பெற்று வரும் உதவித் தொகையுடன் ஆயிரம் ரூபாய் சேர்த்து வழங்கப்படுகிறது.
இதன் மூலம் அரசுக்கு ஆண்டிற்கு ரூ.25.59 கோடி கூடுதல் செலவாகும்.

