/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொசுக்கள் அதிகரிப்பு; அதிகாரிகள் ஆய்வு
/
கொசுக்கள் அதிகரிப்பு; அதிகாரிகள் ஆய்வு
ADDED : மார் 05, 2024 11:56 PM

புதுச்சேரி : நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளதா என தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரியில், கொசுக்களின் உற்பத்தியால், சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுவதை தடுக்க, சட்டசபை வளாகத்தில் கொசுக்களின் இனப்பெருக்கம் உள்ளதா என, அதிகாரிகள் நேற்று ஆய்வில் ஈடுப்பட்டனர்.
அதில், அப்பகுதியில் இனப்பெருக்கத்திற்கான சூழ்நிலை இல்லை ஆய்வில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து, அதிகாரிகள், சட்டசபை எதிரே உள்ள பாரதி பூங்காவில் உள்ள தாமரை குளத்தில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, பூங்காவின் வாயிலில் உள்ள அம்பேத்கர் சிலை சதுக்கத்தில் இருக்கும் சிறிய குளத்தில் நீரை சேகரித்து ஆய்வு செய்தனர். அதில், யானைக்கால் நோயை பரப்பும், கொசு லார்வா உள்ளதை கண்டறிந்தனர்.
பின், நீரை வெளியேற்றி, கொசு மருந்து அடிக்க ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனர்.
இந்த ஆய்வில், குயவர்பாளையத்தில் உள்ள நோய் தடுப்பு திட்ட பூச்சியியல் துறை, தொழில்நுட்ப உதவியாளர்கள், சுகாதார உதவியாளர்கள், பூச்சு சேகரிப்பாளர்கள் ஈடுபட்டனர்.

