/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் சுதந்திர தின விழா
/
பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2025 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்:ஊசுடேரி பாரத் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடினர்.
பள்ளியின் தாளாளர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சாந்தி ஜெயசுந்தர் முன்னிலை வகித்தார். சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
விழாவில் நாட்டுப் பற்றைத் துாண்டும் வகையில் பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.ஏற்பாடுகளை பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.