/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொம்யூன் அலுவலகத்தில் சுதந்திர தின விழா
/
கொம்யூன் அலுவலகத்தில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2025 03:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் 79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்ட து.
ஆணையர் எழில்ராஜன் தலைமை தாங்கி, தேசியக்கொடியேற்றினார்.
உதவிப் பொறியாளர் மல்லிகார்ஜூனன், இளநிலைப் பொறியாளர்கள் மனோகரன், பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து ஆணையர் எழில்ராஜன் சுதந்திரபோராட்ட தியாகிகள் ராமானுஜம், அரங்கநாதன் மற்றும் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் பச்சையப்பன், வெங்கடேசன், ராஜசேகர் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினார்.
விழாவில் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

