/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., அலுவலகத்தில் சுதந்திர தின விழா..
/
காங்., அலுவலகத்தில் சுதந்திர தின விழா..
ADDED : ஆக 16, 2025 03:05 AM

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் 79வது சுதந்திர தின விழா நடந்தது.
முதல்வர் ரங்கசாமி, தேசிய கொடியை ஏற்றி, மரி யாதை செலுத்தினார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், தீப்பாந்தான், பாஸ்கர், தலைமை செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி., ஷாலினி சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி காங்., சார்பில், 79வது சுதந்திர தின விழாவில் மாநில தலைவர் வைத்திலிங்கம் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், வழக்கறிஞர் அணி தலைவர் மருதுபாண்டியன், சேவாதள நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காமராஜர் தொகுதி காங்., சார்பில், சாரம் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, தொகுதி பொறுப்பாளர் தேவதாஸ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் வைத்திலிங்கம் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.

