/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வழக்கறிஞர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா
/
வழக்கறிஞர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2025 03:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உழவர்கரை தொகுதி வழக்கறிஞர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
உழவர்கரை தொகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சசிபாலன். இவரது அலுவலகத்தில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வழக்கறிஞர் சசிபாலன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பளராக கமாண்டோ கோகுல பிரசாந்த் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து மாணவர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சசிபாலன் பாசறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.