மாகேவில் சுதந்திர தின விழா அமைச்சர் தேசிய கொடியேற்றம்
மாகேவில் சுதந்திர தின விழா அமைச்சர் தேசிய கொடியேற்றம்
ADDED : ஆக 15, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மாகேவில் சுதந்திர தினத்தையொட்டி அமைச்சர் சிவக்கொழுந்து தேசிய கொடி ஏற்றினார்.
மாகேவில் 80 சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அமைச்சர் சிவக்கொழுந்து, தேசிய கொடியை ஏற்றி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, இந்திய ரிசர்வ் பட்டாலியன் மற்றும் பள்ளி மாணவகளின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது. அணிவகுப்பில் சிறப்பாக செயல்பட்ட காவல் படைப்பிரிவு மற்றும் சிறந் பள்ளி அணிக்கு அமைச்சர் கேடயங்கள் வழங்கினார். தேசிய மற்றும் மாநில அளலான போட்டிகளில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
மாகே தாகூர் பூங்காவில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவிடத்தில், அமைச்சர் சிவக்கொழுந்து மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
