புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
ADDED : ஆக 15, 2026 07:52 PM
புதுச்சேரி: புதுச்சேரி, மறைமலை நகர், 5வது குறுக்குத்தெரு மக்கள் நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவில், வேளாண் துணை இயக்குநர் பிரபாகரன் தேசிய கொடி ஏற்றினார். சங்கத் தலைவர் கோவிந்தன், ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி கணேசன் வாழ்த்தி பேசினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பா.ஜ.: புதுச்சேரி பா.ஜ., மனதின் குரல் நிகழ்ச்சி பிரிவு சார்பில் நடந்த விழாவில் மூத்த தொழிற்சங்க தலைவர் கந்தசாமி தேசிய கொடி ஏற்றினார். மாநில பொறுப்பாளர் வெற்றிச் செல்வம், பேராசிரியர் ஆனந்தநடராஜன், தொகுதித் தலைவர் புவனேஸ்வரி, கிளைத் தலைவர் ஆனந்தன், பிரஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நுகர்வோர் குறைதீர்வு ஆணையம்: : லாஸ்பேட்டை, மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணைய வளாகத்தில் நடந்த விழாவில், மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணைய நீதிபதி முத்துவேல் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றினார். ஆணைய உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் நாராயணகுமார், வழக்கறிஞர் சுப்ரமணியன், ஆணைய பதிவாளர் விஜயா கலந்து கொண்டனர்.
சுப்ரமணிய பாரதி பள்ளி: : திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், பள்ளியின் முதல்வர் சம்பத் தேசிய கொடி ஏற்றினார். பள்ளி துணை முதல்வர் சுசீலா சம்பத், நிர்வாக இயக்குனர் ஹரிஷ்குமார் முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிர்வாக இயக்குனர் மோகன்குமார் நன்றி கூறினார்.
பாரத ஸ்டேட் வங்கி: : வில்லியனுார், மேற்கு தேரடி வீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் நடந்த விழாவில், கிளை மேலாளர் ராஜதுரை வெங்கடேசன் தேசிய கொடி ஏற்றினார். துணை மேலாளர் தமிழரசி, ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் சூசை மரியநாதன் டோம்னிக், வாஞ்சிநாதன் இளைஞர் அமைப்பு நிறுவனர் ராமன், சுகுணாதேவி, துாய லுார்து அன்னை திருத்தலத்தின் பங்கு தந்தை ஆல்பர்ட், லால் பகதுார் சாஸ்திரி சமூக சேவை மன்றத்தின் நிறுவனர் கலிய முருகன், சங்கர வித்யாலயா பள்ளி சுந்தர கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
தாகூர் அரசு கல்லுாரி: : லாஸ்பேட்டை, தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவில், கல்லுாரி முதல்வர் கருப்புசாமி தேசியக் கொடி ஏற்றினார். பேராசிரியர்கள் ராஜேஷ்குமார், ரேவதி, அலுவலகப் பணியாளர் சித்தானந்தம், கண்ணன் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கல்லுாரி பணியாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
பிரசிடென்சி பள்ளி: : ரெட்டியார்பாளையம், பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், தாளாளர் கிறிஸ்டிராஜ், பள்ளி முதல்வர் ஜெயந்தி ராணி தலைமையில் நாராயணசாமி எம்.எல்.ஏ., தேசியக் கொடி ஏற்றினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. பிரசிடென்சி பள்ளி குழுமத்தின் செயலாளர் கவுதம் வாழ்த்தி பேசினார். பள்ளி துணை முதல்வர் ஆரோக்யதாஸ் நன்றி கூறினார்.
