
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: கோர்க்காடு மாரல் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ரத்தனபிரியா முன்னிலை வகித்தார். சுதந்திர தின விழாவையொட்டி, பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.