ADDED : ஆக 15, 2026 11:44 PM
அ நிறம் | அளவு
டிசி படம்: புதுச்சேரி: புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழாவிற்கு தலைமை நீதிபதி ஆனந்த் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினார்.
பின் போலீசார் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு, மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதிகள், இலவச சட்ட உதவி ஆணைய உறுப்பினர், செயலாளர், தனி அதிகாரி, சார்பு நீதிபதிகள், உரிமை இயல் நீதிபதிகள், மாஜிஸ்ட்ரேட்டுகள், வழக்கறிஞர் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் நாராயணகுமார், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
