ADDED : ஆக 15, 2026 11:44 PM
புதுச்சேரி: புதுச்சேரி பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி, அம்மனுக்கு நடந்த வளைகாப்பு விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பெரியபாளையத்தம்மன் கோவிலில் 10ம் ஆண்டு ஆடிப்பூரம் விழா நடந்தது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று அம்மனுக்கு வளைகாப்பு நலங்கு வைபவம் நடைபெற்றது.
விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பிறந்த நாளையொட்டி, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கவர்னர் கைலாஷ்நாதன் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் அறங்காவல் குழு சார்பில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்
