/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டில்லியில் போராட்டம் நடத்த தயாராகும் சுயேட்சை எம்.எல்.ஏ.,
/
டில்லியில் போராட்டம் நடத்த தயாராகும் சுயேட்சை எம்.எல்.ஏ.,
டில்லியில் போராட்டம் நடத்த தயாராகும் சுயேட்சை எம்.எல்.ஏ.,
டில்லியில் போராட்டம் நடத்த தயாராகும் சுயேட்சை எம்.எல்.ஏ.,
ADDED : மே 11, 2025 01:11 AM
உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., நேரு. சுயேட்சையான இவர், தற்போதைய கூட்டணி அரசில் என்.ஆர்.காங்., கட்சிக்கு மட்டும் ஆதரவு தெரிவித்து வருகிறார். இருப்பினும், மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்.
கடந்த லோக்சபா தேர்தலில், காங்., கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, பிரசாரமும் மேற்கொண்டார்.
இந்நிலையில் மீண்டும் பூதாகரமாகியுள்ள மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான மாநில அந்தஸ்து விவகாரத்தை தீவிரமாக முன்னெடுக்க இவர் முடிவு செய்துள்ளார்.
அதனையொட்டி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி வரும் ஜூன் 27ம் தேதி, தலைநகரான டில்லி, ஜந்தர் மந்திரில் மக்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்.
இதற்காக, 150 பேரை ஏ.சி., ரயிலிலும், 50 பேரை விமானத்திலும் டில்லிக்கு அழைத்து செல்கிறார். ஆர்ப்பாட்டம் நடத்தி முடித்த பின், பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து மனு அளிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களில் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார்.
மாநில அந்தஸ்து கோரி பிரதான கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அவ்வப்போது குரல் கொடுப்பதும், பின்னர் மவுனம் காப்பதும் வாடிக்கையாக உள்ள நிலையில், சுயேச்சை எம்.எல்.ஏ., மாநில அந்தஸ்து விவகாரத்திற்காக மக்களை அழைத்து சென்று டில்லியில் போராட்டம் நடத்த இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.