/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடும் குழப்பத்தில் உள்ள சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள்
/
கடும் குழப்பத்தில் உள்ள சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள்
ADDED : ஜன 26, 2025 04:49 AM
வரும் தேர்தலில் எந்த கட்சியில் நிற்பது என, புரியாமல் புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எப்போதும் இல்லாத வகையில் உருளையன்பேட்டையில் நேரு, முத்தியால்பேட்டை பிரகாஷ்குமார், உழவர்கரை சிவசங்கரன், திருபுவனை அங்காளன், காரைக்கால் திருநள்ளாறு பி.ஆர்.சிவா, ஏனாம் கொள்ளப்பள்ளி சீனிவாஸ் அசோக் உள்பட 6 சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் ரங்கசாமி உள்பட அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் பலரை தோற்கடித்து வெற்றி பெற்றனர்.
இதில் நேரு, பி.ஆர்.சிவா, பிரகாஷ் குமார் என்.ஆர்.காங்., அங்காளன், சிவசங்கரன், கொள்ளப்பள்ளி சீனிவாஸ் அசோக் ஆகியோர் பாஜ., விற்கும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் எந்த கட்சியில் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என்று கடும் குழப்பத்தில் அவர்கள் உள்ளனர்.
இது மட்டுமன்றி அனைத்து கட்சிகளுமே தங்கள் வேட்பாளர்களை தோற்கடித்த சுயேச்சைகளை கட்சியில் இணைவதை தோல்வி அடைந்த வேட்பாளர்கள் எதிர்த்து வருகின்றனர்.
தற்போது உள்ள சூழ்நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து தனி கட்சி துவங்குவது. இல்லையெனில் தனி அணி துவங்கி தேர்தலை சந்திப்பது அல்லது வழக்கம்போல் சுயேச்சையால் போட்டியிடலாமா என்ற குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

