தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான 3வது போட்டி 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ‘ஏ’ அணி வெற்றி

ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான 3வது போட்டி 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ‘ஏ’ அணி வெற்றி

ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான 3வது போட்டி 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ‘ஏ’ அணி வெற்றி


UPDATED : அக் 11, 2026 08:02 PM

ADDED : அக் 11, 2026 07:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 08:02 PM ADDED : அக் 11, 2026 07:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, துத்திப்பட்டு சீகெம் மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்தியா ஏ அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி, 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 275 ரன்கள் சேர்த்தது. அணியின் தொடக்க வீரர்களான பிரியான்ஷ் ஆர்யா 49 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 39 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். பின், விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்த நிலையில், அதிரடியாக விளையாடிய சூரியன்ஸ் ஷெட்ஜ் 66 ரன்களும், விப்ராஜ் நிகாம் 40 ரன்களும் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

ஆஸ்திரேலியா ஏ தரப்பில் பென் டுவார்ஷுயிஸ் மற்றும் வில் சதர்லேண்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து, 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர் ஜோஷ் பிலிப் 56 ரன்களும், நாதன் மெக்ஸ்வீனி 39 ரன்களும் எடுத்து நம்பிக்கை அளித்தனர். இருப்பினும், இந்திய அணியின் பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 46.2 ஓவர்களில் 226 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியா ஏ அணி சார்பில் குர்ஜப்நீத் சிங் 3 விக்கெட்டுகளையும், யஷ் தாக்கூர் மற்றும் நிஷாந்த் சிந்து தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி ஆறுதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

சிறந்த உபசரிப்புக்கு கோப்பையைப் பரிசளித்த ஆஸ்திரேலியா அணி

புதுச்சேரியில் நடந்த இரண்டு மல்டி நாள் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், தங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பான உபசரிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆஸ்திரேலியா ஏ அணி தான் வென்ற ஒருநாள் தொடர் கோப்பையை, புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்திற்குப் பரிசாக வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் இந்த நெகிழ்ச்சியான செயல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us