ஓவியம், பேச்சு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
ஓவியம், பேச்சு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
UPDATED : அக் 11, 2026 08:25 PM
ADDED : அக் 11, 2026 07:59 PM
புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., சார்பில் ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ தலைப்பில் ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா நடந்தது.
பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி பா.ஜ., கட்சி சார்பில், வளர்ச்சியடைந்த பாரதம் 2047 தலைப்பில், புதுச்சேரியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஓவியம், பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி, வில்லியனுாரில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏக்கள்., தீப்பாய்ந்தான், பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில், மாநில பொது செயலாளர் மோகன்குமார், துணைத் தலைவர் ரத்னவேல், மாநில செயலாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை மாநில பொறுப்பாளர்கள் கோவேந்தன், நாகேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியாக அமைக்கப்பட்டு, பார்வைக்கு வைக்கப்பட்டன.
