UPDATED : அக் 11, 2026 08:09 PM
ADDED : அக் 11, 2026 08:06 PM

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி சார்பில் ‘துாய்மையே சேவை - 2026’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பொது மக்களிடையே துாய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு கொடியசைத்து துவக்கி வைத்தார். செயற்பொறியாளர் மலைவாசன், நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நகராட்சி அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம் இந்திரா சதுக்கம், ராஜிவ் சதுக்கம், வழுதாவூர் சாலை, அய்யங்குட்டிப்பாளையம், கோபாலன் கடை, பிச்சைவீரன் பேட், மூலகுளம், ரெட்டியார் பாளையம் வழியாக மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
ஊர்வலத்தில், துாய்மையான மற்றும் பசுமையான நகரை உருவாக்குவதன் அவசியம் குறித்தும், சுற்றுப்புறச் சூழலைப் பேணிப் பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
