மாநில அளவிலான பேச்சு போட்டி: புதுச்சேரி மாணவிக்கு முதல் பரிசு
மாநில அளவிலான பேச்சு போட்டி: புதுச்சேரி மாணவிக்கு முதல் பரிசு
UPDATED : அக் 11, 2026 09:03 PM
ADDED : அக் 11, 2026 08:06 PM

புதுச்சேரி: மாநில அளவிலான திருக்குறள் பேச்சு போட்டியில் புதுச்சேரி மைய மாணவி வர்ஷா மேல்நிலை பிரிவில் முதலிடம் பிடித்தார்.
ஸ்ரீராம் இலக்கியக் கழகம், 'இடைநிலைப் பிரிவு, மேல்நிலைப் பிரிவு, கல்லுாரிப் பிரிவு' என, மூன்று பிரிவுகளில் திருக்குறள் பேச்சுப் போட்டியை ஆண்டுதோறும் மாநில அளவில் நடத்தி வருகிறது.
நடப்பாண்டு நடந்த போட்டியில் 5,620 மாணவர்கள் கலந்து கொண்டனர். சென்னை, வேலுார், தாம்பரம், புதுச்சேரி, சேலம், திருச்சி, நெல்லை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், கோவை மற்றும் ஈரோடு ஆகிய 12 மண்டலங்களில் கால் இறுதி மற்றும் அரை இறுதி சுற்றுகள், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றன. இவற்றிற்கான இறுதி சுற்று சென்னையில் நடந்தது.
அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற 36 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர். மேல்நிலைப் பிரிவில் புதுச்சேரி மையத்தில் இருந்து பங்கேற்ற சிதம்பரம் ஷெம்போர்ட் பியூச்சரிஸ்டிக் பள்ளி மாணவி வர்ஷா முதல் பரிசு வென்றார். அவருக்கு, ரூ. 15,000 ரொக்க பரிசு, கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.
