தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆஸ்திரேலியா ஏ அணியை இந்தியா ஏ அணி வீழ்த்தியது

ஆஸ்திரேலியா ஏ அணியை இந்தியா ஏ அணி வீழ்த்தியது

ஆஸ்திரேலியா ஏ அணியை இந்தியா ஏ அணி வீழ்த்தியது


ADDED : செப் 25, 2026 06:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 06:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா ஏ அணியை 162 ரன்கள் வித்தியாசத்தில், இந்தியா ஏ அணி வீழ்த்தியது.

ஆஸ்திரேலியா ஏ மற்றும் இந்தயா ஏ அணிகளுக்கு இடையோயான முதல் டெஸ்ட் போட்டி, கடந்த 22ம் தேதி சி.ஏ.பி., சீகெம் மைதானத்தில் துவங்கியது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 334 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய இரண்டாவது இன்னிங்சின் கடைசி நாளான நேற்று 2 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் என துவங்கியது.

வெற்றிக்கு மேலும் 308 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே, ஜோஷ் பிலிப்பி மற்றும் லியாம் ஸ்காட்டை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் ஆப்-ஸ்பின்னர் தனுஷ் கோட்டியன் ஜேசன் சாங்காவை கிளீன் போல்டு செய்து, மதிய உணவு இடைவேளையில் 185/7 என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணியை தடுமாற செய்தனர்.

உணவு இடைவேலைக்கு பிறகு தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா ஏ 200 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் முலானி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா ஏ அணியின் முதல் இன்னிங்சில் சதம் அடித்த குமார் குஷாக்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இரண்டாவது நான்கு நாள் போட்டி செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2 வரை இங்கே நடைபெறும், அதைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெறும்.

சுருக்கமான ஸ்கோர்: இந்தியா ஏ 334 & 199, ஆஸ்திரேலியா ஏ 171 & 200 . (ஃபெர்கஸ் ஓ’நீல் 47, அன்ஷுல் கம்போஜ் 2-25, துஷார் தேஷ்பாண்டே 3-14, ஷம்ஸ் முலானி 3-57, தனுஷ் கோட்டியன் 2-57)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us