தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தங்கையுடனான காதலை கண்டித்த நண்பரை கொலை செய்த இருவர் கைது

தங்கையுடனான காதலை கண்டித்த நண்பரை கொலை செய்த இருவர் கைது

தங்கையுடனான காதலை கண்டித்த நண்பரை கொலை செய்த இருவர் கைது


ADDED : செப் 25, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில், தங்கையுடனான காதலை கண்டித்த நண்பரை புடவையால் கழுத்தை இறுக்கி கொலை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி, நெல்லித்தோப்பு, பெரியார் நகர் ஜபார் பாய் தோட்டத்தில், வசித்தவர் சுரேஷ்குமார், 27. இவர், கடந்த சில மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் மதுகுடித்து விட்டு, அப்பகுதியில் உள்ளவர்களிடம் வீண் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி அவரது வீட்டில் மர்மான நிலையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து அவரது தாய் பூங்கோதை அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தினர்.

இதில், சுரேஷ்குமார் வீட்டிற்கு இரண்டு வாலிபர்கள் வந்து சென்றது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், சுரேஷ்குமார், நெல்லிக்குப்பத்தில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு அடிக்கடி சென்று தங்கியுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கறிக்கடையில் வேலை செய்யும் கிருஷ்ணமூர்த்தி மகன் ராஜி, 25; சென்டரிங் வேலை செய்யும் சக்திமுருகன் மகன் ஜெய்கணேஷ்,22 ஆகியோருடன் நட்பாக பழகி வந்தார்.

இவர்கள் மூவரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தி வந்து போது, சுரேஷ்குமார் மற்ற இருவரிடமும் அடிக்கடி தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், ராஜிக்கும், சுரேஷ்குமாரின் தங்கைக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனையறிந்த சுரேஷ்குமார், ராஜியை கண்டித்துள்ளார்.

இதனால், இருவருக்கும் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், நெல்லித்தோப்பில் உள்ள சுரேஷ்குமார் வீட்டிற்கு ராஜி மற்றும் ஜெய்கணேஷ் வந்துள்ளனர். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராஜி மற்றும் ஜெய்கணேஷ் ஆகியோர் சுரேஷ்குமாரை புடவையால் கழுத்தை நெருக்கி கொலை செய்துவிட்டு, சாவகாசமாக வீட்டிலிருந்து வெளியேறினர்.

பின் புதிய பஸ் ஸ்டாண்டில், இருந்து பஸ் மூலம் கடலுார் சென்றது சி.சி.டி.வி., காட்சி பதிவுகள் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு, நெல்லிக்குப்பத்தில் பதுங்கி இருந்த ராஜி, ஜெயகணேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து புதுச்சேரி அழைந்து வந்தனர்.

இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் நேற்று அடைத்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us