/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இண்டியா கூட்டணியின் விவசாய அணிகூட்டம்
/
இண்டியா கூட்டணியின் விவசாய அணிகூட்டம்
ADDED : மே 09, 2025 12:17 AM

புதுச்சேரி: இண்டியா கூட்டணியின் விவசாய அணிகூட்டம் முதலியார்பேட்டை இந்திய கம்யூ., கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
காங்., விவசாய அணி தேசிய தலைவர் சூசைராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இ.கம்யூ., கட்சி மாநில செயலாளர் சலீம், புதுச்சேரி விவசாயிகள் சங்கத் தலைவர் கீதநாதன், புதுச்சேரி காங்., கட்சி விவசாய அணி தலைவர் சையத் அலி, புதுச்சேரி பால் உற்பத்தியாளர் சங்க பொதுச்செயலாளர் பெருமாள், அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் சங்கர், தி.மு.க., விவசாய அணி தலைவர் குலசேகரன், அகில இந்திய விவசாயிகள் மகாசபா தலைவர் புருஷோத்தமன், மக்கள் அதிகாரம் விவசாய அணி தலைவர் பூபதி, ஏ. ஐ. டி.யூ.சி., மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா, சி.ஐ.டி.யூ. மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், தலைவர் பிரபுராஜ், ஏ.ஐ.டி.யூ.சி மாநில குழு உறுப்பினர் மூர்த்தி, இ. கம்யூ., கட்சி காமராஜ் நகர் தொகுதி செயலாளர் துரை செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் புதுச்சேரியில் கிராமபுறங்களில் பந்த் போராட்டம் மற்றும் மறியல் போராட்டமும் நடத்துவது. கிராமப்புற பந்த் போராட்டத்தை விளக்கி பாகூர், திருக்கனூரில் தெருமுனை கூட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி விவசாயிகள் சங்கம் தலைவர் கீதநாதன் நன்றி கூறினார்.