தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சென்னைக்கு இந்தியா – ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் டிரா: தொடரை கைப்பற்றியது இந்தியா

சென்னைக்கு இந்தியா – ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் டிரா: தொடரை கைப்பற்றியது இந்தியா

சென்னைக்கு இந்தியா – ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் டிரா: தொடரை கைப்பற்றியது இந்தியா


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 09:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 09:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, துத்திப்பட்டு சீகெம் மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததால், தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதிய 2வது மல்டிடே டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் ஆஸ்திரேலியா 365 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியா ஏ அணி 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரண்களுடன் களத்தில் இருந்தது.

நேற்று 4ம் நாள் ஆட்டம் துவங்கியது. இந்தியா ‘ஏ’ அணியின், நைட் வாட்ச்மேன் துஷார் தேஷ்பாண்டே (52) அரைசதம் அடித்து நல்ல அடித்தளம் அமைத்தார். 7 விக்கெட்டிற்கு 205 ரன்களுடன் இந்திய அணி தடுமாறியது.

8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த யாஷ் ரத்தோடு, 80 ரன்களும், - ஷாம்ஸ் முலானி 29 ரன்களுடன் எடுத்து 36 ஓவர்கள் தாக்குப்பிடித்து (85 ரன்கள்) எடுத்தனர்.

இவர்களின் இருவருரது விக்கெட்டும் விழ, பரபரப்பு தொற்றிக் கொண்டது. இறுதியில் களம் இறங்கிய நசிகேத் பூதே - பிரபுல் ஹிங்கே ஜோடி 3 ஓவர்களை சமாளித்து விளையாடி, 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தனர்.

இதன் மூலம் 1–0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. சாம் ஹார்ப்பர் ஆட்டநாயகனாகவும், ஷம்ஸ் முலானி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

சுருக்கமான ஸ்கோர்: ஆஸ்திரேலியா ஏ 358 & 173/4 டிக்ளேர், இந்தியா ஏ 167 & 310/9. (துஷார் தேஷ்பாண்டே 52, யஷ் ரத்தோட் 80, லியம் ஸ்காட் 5-37).

தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் அக். 6ம் தேதி நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us