UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 09:05 PM
திருபுவனை: திருக்கோவிலுார் அடுத்த கூவனுார் அடுத்த மிலாரிப்பட்டு மெயின்ரோட்டை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் மணிகண்டன் 23; தனியார் பஸ்சில் செக்கராக பணிபுரிகிறார்.
கடந்த 23ம் தேதி புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கிச்சென்ற அந்த பஸ் மதியம் 1:40 மணிக்கு திருபுவனை பஸ் நிறுத்தத்தில் நின்றது. அங்கு வந்த பள்ளிநேலியனுாரை சேர்ந்த தன்ராஜ், அவரது உறவினர் தினேஜ் மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் சேர்ந்து, மணிகண்டனை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில், மணிகண்டன் அணிந்திருந்த 2 சவரன் செயின் மாயமானது.
காயமடைந்த மணிகண்டன் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மணிகண்டன் புகாரின்பேரில், திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, தன்ராஜ், தினேஷ் உட்பட நால்வரை தேடி வருகின்றனர்.
