இந்தியா---- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் மோதும் நட்பு ரீதியான கிரிக்கெட் தொடர் இன்று துவக்கம்
இந்தியா---- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் மோதும் நட்பு ரீதியான கிரிக்கெட் தொடர் இன்று துவக்கம்
ADDED : செப் 22, 2026 02:59 AM

புதுச்சேரி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் மோதும் நட்பு ரீதியான கிரிக்கெட் தொடர் புதுச்சேரி துத்திப்பட்டு சி.ஏ.பி., கிரிக்கெட் மைதானத்தில் இன்று துவங்குகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், புதுச்சேரிக்கு ஆஸ்திரிரேலியா ஏ, இந்தியா ஏ, அணி பங்கேற்று விளையாடும் நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டி சி.ஏ.பி., மைதானத்தில் இன்று துவங்குகிறது. இங்கு இரண்டு டெஸ்ட் போட்டி யும், 3 ஒரு நாள் போட்டிகள் நடக்கிறது.
இப்போட்டிகள் அடுத்தமாதம் 11ம் தேதி வரை நடக்கிறது. போட்டிகளில் பங்கேற்பதற்காக சி.ஏ.பி., மைதானத்தில் தொடங்கும் நான்கு நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஏ அணியை, இந்தியா ஏ எதிர்கொள்ளும் நிலையில், இடதுகை ஆட்டக் காரர்களான தேவ்தத் படிக்கல், காயத்திலிருந்து மீண்டுள்ள சாய் சுதர்சன் மீது கவனம் குவிந்துள்ளது.
சுதர்சனிடமிருந்து டெஸ்ட் எண் 3 இடத்தைப் பெற்றுக்கொண்ட கேப்டன் படிக்கல், சமீபத்திய இலங்கை சுற்றுப்பயணத்தில் இரு டெஸ்ட்களிலும் சதம் அடித்து வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். இந்தியா இந்த ஆண்டில் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இரண்டு டெஸ்ட் போட்டி களில் விளையாட உள்ளது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐந்து டெஸ்ட் தொடர் ஒன்றில் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது.
பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடருக்கான தயாரிப்பாக 12 மாதங்களில் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியா ஏ அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
பல நாள் போட்டிகளுக்கான அணியில் அனுபவமிக்க பேட்டர் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் ஆஷஸ் தொடரை வென்ற வேகப்பந்து வீச்சாளர்களான பிரெண்டன் டோகெட் மற்றும் ஜே ரிச்சர்ட்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய ஏ அணி வீரர்கள் விவரம்: அமன் மோகாதே, ஆயுஷ் பாண்டே, தேவ்தத் படிக்கல் (கேப்டன்), சாய் சுதர்சன் (துணை கேப்டன்) யஷ் ரத்தோட், ஷேக் ரஷீத், குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்) ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன், துஷார் தேஷ்பாண்டே, அன்ஷூல் கம்போஜ், பிரபுல் ஹிங்கே, என் ஜெகதீசன், நாசிகேத் பூதே, திரிபுரானா விஜய் வீரர்கள்.
ஆஸ்திரேலியா ஏ அணிகள் பிரெண்டன் டோகெட், ஜாக் எட்வர்ட்ஸ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், சாம் ஹார்பர், லியாம் ஹாட்சர், கேம்ப்பெல் கெல்லவே, சாம் கான்ஸ்டாஸ், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்பி, பெர்கஸ் ஓ நீல், ஜோஷ் பிலிப்பி, ஜே ரிச்சர்ட்சன், கோரி ரோச்சிசியோலி, ஜேசன் சங்கா, லியாம் ஸ்காட் ஆகியோர் விளையாட உள்ளனர்.
