/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இண்டியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை
/
இண்டியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை
ADDED : ஆக 24, 2025 09:40 PM
பாகூர் : குடியிருப்புப்பாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமங்களில், அடிப்படை பிரச்னைகளை சரி செய்வது குறித்து, இண்டியா கூட்டணி கட்சியினர் ஆலோசனை நடத்தினர்.
குடியிருப்புபாளையம் சமுதாய நலக்கூட வளாகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு, இந்திய கம்யூ., ஏம்பலம் தொகுதி செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார்.
இதில், இந்திய கம்யூ., காங்., வி.சி.க., உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் குடியிருப்புப்பாளையம் - பிள்ளையார்குப்பம் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். குடியிருப்புப்பாளையம் சுப்பையா நகரில் பயணியர் நிழற்குடை அமைக்கவேண்டும்.
குடியிருப்புப்பாளையம், ஆதிங்கப்பட்டு, பின்னாச்சிக்குப்பம், சர்கசிமேட்டில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்க வேண்டும்.
தகன கொட்டகை, கருமாதி கொட்டகை புதியதாக கட்டிக் கொடுக்க வேண்டும்.
குடியிருப்புப்பாளையம் பஞ்சாயத்தில் புதிய மனை குடியிருப்பு பகுதியில் சாலை அமைக்கவேண்டும்.
குடியிருப்புப்பாளையம் - ஆதிங்கப்பட்டு - பின்னாச்சிக்குப்பம் - சர்கசிமேடு வழியாக மீண்டும் அனைத்து பஸ்களையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவற்றை வலியுறுத்தி வரும் 30ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.