/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உலகத்தின் குருவாக இந்தியா மாறும் ஆர்.எஸ்.எஸ்., நம்பிக்கை
/
உலகத்தின் குருவாக இந்தியா மாறும் ஆர்.எஸ்.எஸ்., நம்பிக்கை
உலகத்தின் குருவாக இந்தியா மாறும் ஆர்.எஸ்.எஸ்., நம்பிக்கை
உலகத்தின் குருவாக இந்தியா மாறும் ஆர்.எஸ்.எஸ்., நம்பிக்கை
ADDED : அக் 07, 2024 06:19 AM

புதுச்சேரி: பாரத தேசத்தின் மீது அக்கறை உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் இந்தியா உலகத்தின் குருவாக மாறும் என, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென் பாரத ஊடக பிரிவு பொறுப்பாளர் ஸ்ரீராம் பேசினார்.
புதுச்சேரி, காந்தி சிலை அருகில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பொதுக்கூட்டம் நடந்தது. புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் பாபு தலைமை தாங்கினார். சாய் கிருபா மருத்துவமனை நிறுவனர் சிவதாசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தென்பாரத ஊடக பிரிவு பொறுப்பாளர் ஸ்ரீராம் பேசியதாவது:
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பானது, கடந்த 99 ஆண்டுகளாக நல்ல பண்புகளும், திறமையும் உள்ள மனிதர்களை உருவாக்கும் மிகச்சிறந்த பணியை செய்து வருகிறது.
தற்போது சங்கம் நுாற்றாண்டு விழாவை, நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த சமுதாயத்தையும் இணைத்து கொண்டு, சங்கம் வேலை செய்ய விரும்புகிறது. இதன் அடிப்படையில், 'பஞ்ச பரிவர்தன்' எனும் தலைப்பில், ஐந்து விஷயங்களை முன்னெடுத்துள்ளது.
முதலாவது, 'சாமாஜிக் சமரசதா' என்பதாகும். அதாவது, ஏற்றத்தாழ்வு அற்ற சமுதாயம் அமைத்தல். குடும்ப பிரபோதன் - இந்து குடும்ப வாழ்க்கை முறை; பரியாவரன் - இயற்கையோடு இசைந்த வாழ்க்கை; சுவ - சுதேசிய வாழ்வியல் முறை; நாகரீக சிச்டாச்சா - குடிமகனின் அடிப்படை கடமைகள் உள்ளிட்டவைகள் ஆகும்.
இதற்கான திட்டங்களை வகுத்து, சங்கம் செயலாற்றி வருகிறது. அவ்வாறு செய்தால். வரும், 2047ல் இந்தியா சுதந்திரம் அடைந்த நுாற்றாண்டை கொண்டாடும் போது, உலகத்தின் குருவாக மாறி விடும்.
இவ்வாறு பேசினார்.
முன்னதாக, 'தற்காலிக சூழலில் இந்துத்துவா' எனும் தலைப்பில் நுால் வெளியிட்டது. கூட்டத்தில், சபாநாயகர் செல்வம், பா.ஜ., தலைவர் செல்வகணபதி எம்.பி, அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார், அசோக் பாபு எம்.எல்.ஏ. புதுச்சேரி ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட மாவட்ட தலைவர் அரவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

