ADDED : அக் 22, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் பார்வதீஸ்வரர் கோவில் நிலமோசடியில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, பணத்தை மீட்க கோரி, இந்திய கம்யூ., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதிய பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா கண்டன உரையாற்றினர்.
இதில் காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நிலமோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும், ஏழை மக்களுக்கு இலவச மனைப்பாட்டா வழங்க வேண்டும், அரசு மருந்துவமனையில் மருந்து, மாத்திரை பற்றாக்குறையை போக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

