ADDED : ஆக 08, 2025 09:44 PM
பாகூர்; கிருமாம்பாக்கத்தில் இந்திய கம்யூ., சார்பில் கிளை மாநாடு நடந்தது.
மாநாட்டிற்கு, கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். தொடர்ந்து, கிருமாம்பாக்கம் கிளைச் செயலாளராக லெனின், துணைச் செயலாளராக முருகையன், பொருளாளராக சுமதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஏம்பலம் தொகுதி செயலாளர் பெருமாள், தொகுதி மாநாடு, மாநாடு குறித்து பேசினார். தொடர்ந்து, கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். தொகுதி துணைச் செயலாளர் பக்தவச்சலம் கிருமாம்பாக்கத்தில் உள்ள அடிப்படை பிரச்னை குறித்து பேசினார்.
மாநாட்டில், கிருமாம்பாக்கத்தில் பாட்கோ மூலம் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு கிடப்பில் உள்ள திருமண நிலைய கட்டுமானப் பணியை துவங்கிட வேண்டும். கிருமாம்பாக்கம் ஏரி சுற்றுலா தளம் திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

