/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதகடிப்பட்டில் தொடரும் போக்குவரத்து நெரிசல் தீர்வு காண இந்திய கம்யூ., வலியுறுத்தல்

ADDED : ஆக 25, 2025 05:49 AM

திருபுவனை: மதகடிப்பட்டில் தினந்தோறும் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருபுவனை தொகுதி இந்திய கம்யூ., மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய கம்யூ., கட்சியின் திருபுவனை தொகுதிக்குழு 16வது மாநாடு மதகடிப்பட்டு கே.ஜி., காம்ப்ளக்சில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு வீரப்பன், சீனிவாசன், செல்வி ஆகியோர் தலைமை தாங்கினர். மாநாட்டு கொடியை எத்திராஜ் ஏற்றி வைத்தார் மாநில செயலாளர் சலீம், மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார்.
திருபுவனை தொகுதி செயலாளர் ரவி வேலை அறிக்கையை வாசித்தார். மாநில துணைச் செயலாளர் சேதுசெல்வம் வாழ்த்தி பேசினார்.
தொகுதி குழு உறுப்பினர்கள் சீனுவாசன், பிரகாஷ், ராமசாமி, சிதம்பரம், குப்புசாமி, முத்து, செல்வி மற்றும் கிளை செயலாளர்கள் வீரப்பன், இளங்கோ, மகாலிங்கம், சக்திவேல்,குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள்:
மதகடிப்பட்டில் தினந்தோறும் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நிரந்தர தீர்வுகாணவேண்டும். மாநிலத்தில் தலைவிரித்தாடும் லஞ்ச, ஊழலை ஒழித்து நேர்மையான நிர்வாகத்தை நடத்திடவேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்டட்டது.