/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
/
இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
ADDED : நவ 27, 2025 04:31 AM

புதுச்சேரி: இந்திய அரசியல் அமைப்பு நாளையொட்டி, கவர்னர் மாளிகையில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
கவர்னர் கைலாஷ்நாதன் அரசியல் அமைப்பு தின உறுதி மொழியை வாசிக்க, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
புதுச்சேரி சட்டசபையில் உள்ள சட்டத்துறை அமைச்சர் அலுவலகத்தில், நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில், இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடந்தது.
இதில், சட்ட துறை செயலர் விக்ராந்த் ராஜா, துணைச் செயலர் ஜனாஸ் ரபி (எ) ஜான்சி, அரசு வழக்கறிஞர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு, உறுதி மொழி ஏற்றனர்.
பாண்டிச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 76வது அரசியலமைப்பு தினம் மற்றும் சட்ட நாள் தின நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைமை நீதிபதி ஆனந்த் தலைமை தாங்கினார். நுகர்வோர் மாவட்ட நீதிமன்றத்தின் தலைவர் முத்துவேல், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
பொதுச்செயலாளர் நாராயணகுமார் வரவேற்றார்.
நீதிபதி சுமதி அரசியலமைப்பு முகப்புரை வாசிக்க, நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உறுதி மொழி ஏற்றனர். தொடர்ந்து சட்ட நாள் தின உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.சங்க துணை தலைவர் இந்துமதி புவனேஸ்வரி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை சங்க பொருளாளர் ராஜபிரகாஷ் செய்திருந்தார்.
புதுச்சேரி தலைமை செயலகத்தில் நடந்த அரசியல் அமைப்பு தின நிகழ்ச்சியில், தலைமை செயலர் சரத் சவுகான் தலைமை தாங்கி, அரசியல் அமைப்பு தின உறுதிமொழி வாசிக்க, அனைத்து அரசு செயலர்கள், தலைமை செயலக ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

