/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய மருத்துவ கழக மருத்துவ கருத்தரங்கு
/
இந்திய மருத்துவ கழக மருத்துவ கருத்தரங்கு
ADDED : பிப் 10, 2025 07:27 AM

புதுச்சேரி,: இந்திய மருத்துவக் கழகம், புதுச்சேரி கிளை மற்றும் நரம்பியல் மற்றும் பக்கவாத சேவைகள் துறை இணைந்து, மருத்துவ கருத்தரங்கை நடத்தியது.
புதுச்சேரி ஜிப்மர் கலையரங்கில், தொடர் மருத்துவ கருத்தரங்கு நடந்தது. ஜிப்மர் இயக்குனர் வீர சிங் நேகி தலைமை தாங்கி பேசுகையில், ஜிப்மர் மருத்துவமனையில் தொலை மருத்துவம் சார்ந்த மேற்பார்வை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை பரிசீலிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மருத்துவ கண்காணிப்பாளர் துரைராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பக்கவாத சிகிச்சை, நரம்பியல் துறைத் தலைவர் சுனில் நாராயண் பேசுகையில், பக்கவாதம் சமீபத்தில் குறிப்பிட்ட சிகிச்சைகளின் மூலம் வேகமாக குணப்படுத்த முடிகிறது. பக்கவாத நோயின் தீவிரம் அதிகமாகும் சூழ்நிலையில், உடனடியாக சிகிச்சை அளிப்பதன் மூலம் பக்கவாதத்தை குணப்படுத்தவும், முறையான மறுவாழ்வு சிகிச்சை அளிப்பதால், பாதிப்புகள் மீண்டும் வருவதை தடுக்க முடியும் என விளக்கம் அளித்தார்.
கருத்தரங்கில், இந்திய மருத்துவக்கழக புதுச்சேரி கிளை தலைவர் சுதாகர், பொதுச் செயலாளர் சீனிவாசன், மருத்துவர்கள் மானு அய்யன், அமராவதி, விவேகனந்தன், ஜிப்மர் உட்பட வெளி மருத்துவமனைகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

