/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய கடற்படையின் சிம்போனிக் இசை நிகழ்ச்சி
/
இந்திய கடற்படையின் சிம்போனிக் இசை நிகழ்ச்சி
ADDED : ஆக 14, 2025 01:14 AM

புதுச்சேரி : நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய கடற்படையின் கண்கவர் சிம்போனிக் இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சி புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் நடந்தது.
நகர்புற பொழுதுபோக்கு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கமாண்டர் சதீஷ் சாம்பியன் தலைமையிலான 18 பேர் கொண்ட இசைக்குழுவினர் தமிழ் மற்றும் மேற்கத்திய பாடல்களை பாடியும், இசைத்தும் பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இசை நிகழ்ச்சியில் தற்காப்பு இசை முதல் ஆன்மாவைத் துாண்டும் தேசபக்தி பாடல்கள் வரையிலான பல்வேறு இசைத் தொகுப்புகள் இடம் பெற்றன. ஹாலிவுட் திரைப்பட கருப்பொருள்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை சித்தரிக்கும் பாடல்கள் இசைக்கப்பட்டன.
தேசப்பக்தி முப்படைகளின் பாடல் மற்றும் சரே ஜஹான் சே அச்சாவுடன் இசையுடன் நிகழ்ச்சி முடிந்தது.
நிகழ்ச்சி நடத்திய கடற்படை இசைக்குழுவினர் மற்றும் கலைஞர்களை கவர்னர் கைலாஷ்நாதன் பாராட்டினார்.