/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்கலைக்கழக பேரவை தேர்தல் இந்திய மாணவர் சங்கம் வெற்றி
/
பல்கலைக்கழக பேரவை தேர்தல் இந்திய மாணவர் சங்கம் வெற்றி
பல்கலைக்கழக பேரவை தேர்தல் இந்திய மாணவர் சங்கம் வெற்றி
பல்கலைக்கழக பேரவை தேர்தல் இந்திய மாணவர் சங்கம் வெற்றி
ADDED : நவ 10, 2025 03:45 AM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை தேர்தல் மற்றும் பாலியல் புகார் குழுவில் மாணவர் பிரதிநிதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 5ம் தேதி நடந்தது.
புதுச்சேரி பல்கலைக் கழகம், சமுதாயக் கல்லுாரி, காரைக்கால் பல்கலைக்கழக வளாகம், அந்தமான் பல்கலைக்கழக வளாகம், மாகே பல்கலைக்கழக கிளையில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்தலில் பங்கு பெற்றனர்.
துறைவாரியாக யூ.ஜி., பி.ஜி., ஆராய்ச்சி மாணவர்கள் என, மூன்று பிரிவுகளாக 115 இடங்களுக்கும், பாலியல் புகார் கமிட்டி பிரதிநிதிகளுக்கும் தேர்தல் நடந்தது.இதில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் கூட்டணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
இதில் தலைவராக ஸ்ரேஷ்தா, பொதுச் செயலாளராக சையத் இணையத்ஹுசைன், துணைத் தலைவர்களாக பரசுராம், சியோனா, இணை செயலாளராக அறிவாழியன், நிர்வாக குழு உறுப்பினர்களாக அண்ணா சாலா, நிதா பாத்திமா, நிலா, ஜோதிர்மையி, வர்ஷா, விஷ்ணு, பிரணவ், கீர்த்தி வாசன், நைஸ்இன், டேனிஷ் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

