/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரிக்கு வந்த 'இண்டிகோ' விமானம் கனமழையால் திருச்சியில் தரையிறக்கம்
/
புதுச்சேரிக்கு வந்த 'இண்டிகோ' விமானம் கனமழையால் திருச்சியில் தரையிறக்கம்
புதுச்சேரிக்கு வந்த 'இண்டிகோ' விமானம் கனமழையால் திருச்சியில் தரையிறக்கம்
புதுச்சேரிக்கு வந்த 'இண்டிகோ' விமானம் கனமழையால் திருச்சியில் தரையிறக்கம்
ADDED : அக் 22, 2025 12:37 AM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு வந்த இண்டிகோ விமானம் கனமழையால் திருச்சியில் தரையிறக்கப்பட்டது.
புதுச்சேரியில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்திற்கு இண்டிகோ நிறுவனத்தின் 74 பேர் செல்லக்கூடிய விமான சேவை இயங்கி வருகிறது. பெங்களூருவில் இருந்து பகல் 11:45 மணிக்கு புதுச்சேரி வரும் விமானம், இங்கிருந்து 12:10 மணிக்கு ஹைதராபாத் செல்கிறது. அங்கிருந்து மாலை 4:45 மணிக்கு புதுச்சேரி திரும்புகிறது. மீண்டும் புதுச்சேரியில் இருந்து மாலை 5:10 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் பெங்களூருவில் இருந்து 12:00 மணிக்கு புதுச்சேரி, லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு பயணிகளுடன் வந்த இண்டிகோ விமானம், மழை காரணமாக தரையிறங்க முடியாமல், வானில் சிறிது நேரம் வட்டமடித்து, பின், திருச்சி விமான நிலையத்திற்கு சென்று தரை இறங்கியது. அங்கு பயணிகள் யாரும் இறக்கப்படாமல் விமானத்திலேயே அமர்த்திருந்தினர்.
வானிலை சீரடைந்ததால் திருச்சியில் கிளம்பி லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு 1:45 மணி நேரம் தாமதமாக மதியம் 2:00 மணிக்கு வந்து சேர்ந்தது. அதன் பின் ஹைதராபாத்திற்கு சென்று திரும்பிய விமானம் மாலை 5:10 பெங்களூருக்கு புறப்பட்டது. விமான தாமதத்தால் பயணிகள் அவதியடைந்தனர்.