/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செல்வமுத்துகுமார சுவாமி கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா துவக்கம்
/
செல்வமுத்துகுமார சுவாமி கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா துவக்கம்
செல்வமுத்துகுமார சுவாமி கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா துவக்கம்
செல்வமுத்துகுமார சுவாமி கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா துவக்கம்
ADDED : அக் 22, 2025 12:37 AM
புதுச்சேரி: குயவர்பாளையம் செல்வமுத்துகுமார சுவாமி கோவிலில் 5ம் ஆண்டு கந்தசஷ்டி சூரசம்ஹார விழா நேற்று துவங்கியது.
புதுச்சேரி, குயவர்பாளையத்தில் முத்து விநாயகர், வள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துகுமார சுவாமி கோவிலில் 5ம் ஆண்டு கந்தசஷ்டி சூரசம்ஹார விழா, திருக்கல்யாண உற்சவம் நேற்று துவங்கியது.
இன்று (22ம் தேதி) முதல் தினமும் காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேகம், ஹோம பூஜைகள், இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உள் புறப்பாடு நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக, வரும் 26ம் தேதி இரவு 7:00 மணிக்கு பராசக்தியிடம் இருந்து வேல் வாங்குதல், சிங்கமுகன் சூரசம்ஹாரம், 108 கனிகளால் லலிதா சகஸ்ர நாம பூஜை நடக்கிறது. வரும் 27ம் தேதி காலை 7:00 மணிக்கு ஹோம பூஜைகள் 36 முறை கந்தசஷ்டி பாராயணம், இரவு 7:00 மணிக்கு சூரபத்மா சூரசம்ஹாரம், திருத்தேர் புறப்பாடு, 28ம் தேதி காலை 10:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.