/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திரா நகர் தொகுதி தி.மு.க.,நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
இந்திரா நகர் தொகுதி தி.மு.க.,நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
இந்திரா நகர் தொகுதி தி.மு.க.,நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
இந்திரா நகர் தொகுதி தி.மு.க.,நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜன 12, 2026 03:51 AM

புதுச்சேரி: இந்திரா நகர் தொகுதி, தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்திரா நகர் தொகுதி தி.மு.க., அலுவலகத்தில் நடந்த, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், தொகுதி செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் கோதண்டராமன் முன்னிலை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினரும், தொகுதி பொறுப்பாளருமான காந்தி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து, அவரது மனைவி கவிதா, உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கதிர்காமம் அரசு மருத்துவமனையில், முழு உடல் உறுப்பு தானம் செய்ததற்கு, தி.மு.க., சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.