/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வரிடம் செவிலியர் சங்கம் மனு
/
முதல்வரிடம் செவிலியர் சங்கம் மனு
ADDED : ஜன 12, 2026 03:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: செவிலியர் காலி பணியிடங்களை நிரப்ப கோரி, புதுச்சேரி செவிலியர் நல சங்கம் நிர்வாகிகள் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
புதுச்சேரி செவிலியர் நலசங்கம் சார்பில், செவிலியர் பதவி உயர்வு மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பகோரி சங்கத் தலைவர் சாந்தி, அனுராதா, செயலாளர் விஜயலட்சுமி, பொருளாளர் திலகா, வள்ளி, மஞ்சுளா, நிர்வாகிகள் காந்திமதி, ராசாயி, சுமதி, கவிதா, கலைவாணி, கவுரவ செயலாளர் ஜானகி ஆகியோர் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். மனுவினை பெற்றுக் கொண்ட முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

