/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசியல் செய்வதற்கு தொழிலதிபருக்கு உரிமை உள்ளது; அமைச்சர் சாய் சரவணன்குமார் கருத்து

ADDED : டிச 21, 2024 06:36 AM
புதுச்சேரி: எந்த தொழிலதிபராக இருந்தாலும் புதுச்சேரியில் அரசியல் செய்ய உரிமை உள்ளது என அமைச்சர் சாய் சரவணன்குமார் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது; எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். அரசியலில் கலந்து கொள்ள எல்லோருக்கும் உரிமை உள்ளது. எந்த ஜாதி, எந்த தொழிலதிபராக இருந்தாலும் அரசியல் செய்ய அடிப்படை உரிமை உள்ளது. அதன்படி, தொழிலதிபர்கள் மக்களுக்கு சர்வீஸ் செய்ய வருவதை வரவேற்கிறோம்.
அரசியல்வாதிக்கு பதவி எப்போது முடியும், எப்போது தொடரும் என தெரியாது. மக்களுக்கு சிறப்பான பணி செய்தால் பதவி தொடரும். புதுச்சேரிக்கு சேவை செய்ய யார் வந்தாலும் வரவேற்கிறோம்.
அரசு நிறுவனத்தை தன்னிடம் கொடுத்தால் நடத்துவதாக கூறும் துணிச்சலான முடிவை வரவேற்கிறேன்.
100 காங்., எம்.பி., பா.ஜ.,வுக்கு வருவர். ஆனால் ஒரு பா.ஜ., தொண்டனை கூட மற்ற கட்சிகள் விலை கொடுத்து வாங்க முடியாது. பதவி என்பது கழுத்தில் போடும் துண்டு. பதவிக்காக பா.ஜ., தொண்டர் யாரிடமும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை' என்றார்.