/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்து எக்ஸ்போ ஆயத்த பணிகளில் தொழில் துறை தீவிரம்
/
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்து எக்ஸ்போ ஆயத்த பணிகளில் தொழில் துறை தீவிரம்
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்து எக்ஸ்போ ஆயத்த பணிகளில் தொழில் துறை தீவிரம்
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்து எக்ஸ்போ ஆயத்த பணிகளில் தொழில் துறை தீவிரம்
ADDED : ஜன 22, 2024 05:59 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்து இரண்டு நாள் எக்ஸ்போ நடத்த தொழில் துறை தயாராகி வருகிறது.
புதுச்சேரியில் 125 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ள போதிலும் அவற்றில் 50 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதுச்சேரியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களை இணைக்கும் வகையில் ஸ்டார்ட் அப் எக்ஸ்போ நடத்த தொழில் துறைமுழுவீச்சில் தயாராகி வருகிறது.
கடற்கரை சாலை காந்தி திடலில் பிப்ரவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் இந்த ஸ்டார்ப் அப் எக்ஸ்போ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், அனைத்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி, தொலை தொடர்பு, ஐ.ஓ.டி., சைபர், டேட்டா பாதுகாப்பு, கல்வி, விவசாயம், வாகன போக்குவரத்து, சுற்றுச்சூழல் பாதிக்காத சுற்றுலா, டீப் டெக் என தொழில்நுட்ப வளர்ச்சிகளில் அசத்தலான கண்டுபிடிப்புகளில் முத்திரை பதித்துள்ள ஸ்டார்ட் அப் நிறுவனஙகள் கலந்து கொள்கின்றன.
இது குறித்து தொழில் துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் நம்முடைய ஐடியாக்கள் மற்றும் கிரியேட்டிவிட்டிக்கு நல்ல மதிப்பு உண்டு. புதிய கண்டு பிடிப்புகள் ஸ்டார்ட் அப்பில் உருவெடுக்கின்றன.
ஸ்டார்ட் அப்பில் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
மேலும் ஸ்டார்ட் அப்பில் உள்ள அனைத்து துறைகளைப் பற்றியும் தெரிந்துக்கொள்ள முடியும். புதிய எண்ணங்களுடன் வரும் ஸ்டார்ட் அப்-கள் நாட்டை வளப்படுத்தும் என்பதால் இந்த எக்ஸ்போவினை ஏற்பாடு செய்து வருகிறோம்.
இதன் மூலம் பிரச்னையை எதிர்கொண்டு இருக்கும் தொழிற்சாலைகளுக்கு தொழில்நுட்ப தீர்வுகள் கிடைக்கும்' என்றனர்.