/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'இண்டி' கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்
/
'இண்டி' கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2025 06:38 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இண்டி கூட்டணி கட்டியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு எஸ்.ஐ. ஆர்., என்ற சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியினை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் ஆணையம் அப்பணியினை உடனடியாக கைவிடக்கோரியும் இண்டி கூட்டணி கட்சிகள் சார்பில், அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.,க்கள் நாஜீம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாகதியாகராஜன், இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், மா.கம்யூ., மாநில செயலாளர் ராமச்சந்திரன், வி.சி.க., முதன்மை செயலாளர் தேவ பொழிலன், மக்கள் நீதி மய்ய பொது செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

