/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பச்சிளம் குழந்தை சாவு எல்.ஜே.கே., நிவாரணம்
/
பச்சிளம் குழந்தை சாவு எல்.ஜே.கே., நிவாரணம்
ADDED : டிச 20, 2025 06:32 AM

புதுச்சேரி: நெட்டப்பாக்கம் தொகுதியில் இறந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு எல்.ஜே.கே., கட்சி சார்பில், நிவாரணம் வழங்கப்பட்டது.
நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் புது காலனியை சேர்ந்தவர்கள் அருண் - நதியா தம்பதி. இவர்களது 3 மாத ஆண் குழந்தைக்கு நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 4ம் தேதி தடுப்பூசி போடப்பட்டது. குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டு முறையான மருத்துவ வசதி கிடைக் காததால் இறந்தது.
இந்நிலையில் குழந்தையின் பெற்றோருக்கு லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி, ஆறுதல் கூறினார்.
அங்காளன் எம்.எல்.ஏ., எல்.ஜே.கே., பொது செயலாளர்கள் ரமேஷ், பிரபாகரன், மண்டல பொது செயலாளர் கண்ணபிரான், சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
எல்.ஜே.கே., தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறுகையில்; எங்களால் முடிந்த உதவி செய்தோம். ஆனால் புதுச்சேரி அரசு நெட்டப்பாக்கம் மருத்துவமனைக்கு இன்னும் டாக்டர்களை நியமிக்கவில்லை. குழந்தையின் உடல் கூராய்வு அறிக்கை கூட இதுவரை தரவில்லை.
ஆட்சியாளர்களின் அலட்சியம் கண்டனத்துக்கு உரியது. இதற்கு வரும் தேர்தலில் மக்கள் பதில் அளிப்பார்கள்' என்றார்.

