/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் பணி துவக்கம்
/
சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் பணி துவக்கம்
ADDED : பிப் 03, 2024 12:14 AM

அரியாங்குப்பம், -மணவெளி தொகுதியில் ரூ. 41 லட்சம் மதிப்பில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
மணவெளி தொகுதி, பூரணாங்குப்பம் சாமியார் நகரில், ரூ.10.50 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி நேற்று துவங்கியது. தொடர்ந்து, பூரணாங்குப்பம் வடக்கு வீதியில் ரூ.10.50 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் வசதியுடன் புதிய சிமென்ட் சாலை அமைத்தல், ஓடைவெளி அனுகார்டன் பகுதியில் ரூ. 20 லட்சம் மதிப்பில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைத்தல், என, மொத்தம் ரூ. 41 லட்சம் மதிப்பிலான பணிகளை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ், இளநிலைப் பொறியாளர்கள் சரஸ்வதி, அகிலன், மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் சக்திபாலன், தொகுதி தலைவர் ரஞ்சித்குமார், கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் தலைவர் லட்சுமிகாந்தன் உட்பட பலர் உடனிருந்தனர்.

