UPDATED : நவ 20, 2026 06:22 PM
ADDED : நவ 20, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி சிறையில் ரவுடி ஆணியை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி, டி.வி. நகரை சேர்ந்தவர் சங்கர், 30; ரவுடியான இவர் மீது 36 வழக்குகள் உள்ளன. ரெயின்போ நகரில் நடந்த மூவர் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான இவர், காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் சிறையில் உள்ள சுவிட்ச் போர்டு ஆணியை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட சிறை வார்டன்கள், அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறையில் ரவுடி ஆணியை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
