/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கோவிலில் நாளை இன்னிசை நிகழ்ச்சி
/
மணக்குள விநாயகர் கோவிலில் நாளை இன்னிசை நிகழ்ச்சி
ADDED : பிப் 23, 2024 03:30 AM
புதுச்சேரி: மாசிமக தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு, மணக்குள விநாயகர் கோவிலில் டாக்டர் ஷியாமளா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாசிமக தீர்த்தவாரி உற்சவம் நாளை நடக்கிறது. மணக்குள விநாயகர் உற்சவர் நாளை காலை கோவிலில் இருந்து புறப்பாடாகி, வைத்திக்குப்பம் கடற்கரையில் நடக்கும் தீர்த்தவாரியில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து, மாலை 6:30 மணியளவில், மணக்குள விநாயகர் கோவிலில் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில், டாக்டர் ஷியாமளா வினோத் மற்றும் அவரது இசைப் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர்.
மணக்குள விநாயகர் கோவிலில் மாசிமகத்தன்று முதன் முறையாக இன்னிசை நிகழ்ச்சி இந்தாண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் செய்துள்ளார்.