/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி
/
இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி
ADDED : டிச 23, 2025 04:44 AM

புதுச்சேரி: காலப்பட்டு வேளாண் அலுவலகம் சார்பில் இயற்கை வேளாண்மையில் இடுபொருட்கள் தயாரிப்பு, இயற்கை வேளாண்மை சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறை பயிற்சி கணபதி செட்டிக்குளம் கிராமத்தில் நடந்தது.
வேளாண் அலுவலர் தண்டபாணி வரவேற்றார். இணை வேளாண் இயக்குனர் ஆல்பர்ட் கலந்து கொண்டு இயற்கை வேளாண்மை முக்கியத்துவம், அதன் பயண்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.
காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பண்ணை மேலாளர் அமலோற்பவம் நாதன் மண்புழு உரம் தயாரிப்பு குறித்தும், அதனை பயிர்களுக்கு இடுதல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.
காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மணிமேகலை இயற்கை முறையில் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்துதல் குறித்து பேசினார்.
முன்னோடி விவசாயி பூங்குன்றன் இயற்கை முறையில் இடுபொருட்கள் தயாரிப்பது குறித்து பேசினார்.
வேளாண் வேதியல் துறை அலுவலர் அனுப்குமார், மண்வள அட்டை மற்றும் மண் மாதிரி எடுப்பது குறித்து விளக்கினார்.
இப்பயிற்சியில் காலாப்பட்டு, கனகசெட்டிகுளம், சஞ்சீவி நகர் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ஏற்பாடுகளை செயல்விளக்க உதவியாளர்கள் இளங்கோ, மாதவன் ஆகியோர் செய்திருந்தனர்.

