
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அரசு உதவி பெரும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்க வலியுறுத்தி ஆசிரியர்கள், ஊழியர்கள் பள்ளி கல்வித்துறை முன் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
ஆர்பா ட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்கங்களின் கவுரவத் தலைவர் சேஷாசலம் தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் வின்சென்ட் முன்னிலை வகித்தார். ஆசிரியர் விக்டோரியன், சேவியர், நிக்சன், ஆசிரியர்கள் சிவபெருமாள், அருள்ராஜ், சக்திவேல், ஜெயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டத்தில், புதுச்சேரி யில் இயங்கும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆறு மாத சம்பளம், ஏழு மாத பென்ஷன் வழங்க வலியுறுத்தி ஊழியர்கள், ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பினர்.

