/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சி.சி.டி.வி., கேமரா பொருத்தம்
/
சி.சி.டி.வி., கேமரா பொருத்தம்
ADDED : டிச 23, 2025 04:44 AM

புதுச்சேரி: துணை ஜனாதிபதி வ ருகை யொட்டி லாஸ்பேட்டை விமான நிலையம் துவங்கி, காலாப்பட்டு பல்கலைக்கழகம் வரை கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி பல்கலையில் வரும் 29ம் தேதி நடக்கும், 30ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கடந்த நான்காண்டு படித்த 75 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படுகிறது.
இவ்விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் தனி விமானத்தில் புதுச்சேரி வருகிறார். அதனையொட்டி, லாஸ்பேட்டை விமான நிலையம் முதல், காலாப்பட்டு பல்கலைக்கழகம் வரையில் சாலையில் உள்ள முக்கிய சந்திப்புகளில் மொத்தம் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. மேலும், விமான நிலையம் முதல், பல்கலை வரை சாலையை சீரமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

