/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்
/
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஏப் 12, 2025 07:24 AM

புதுச்சேரி; நகராட்சி உரிமம் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை எளிமையான முறையில் நடைமுறைப்படுத்த உழவர்கரை நகராட்சி வலியுறுத்தியுள்ளது.
ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சகம், புதுச்சேரியை தண்ணீர் பற்றாக்குறை மாவட்டமாக வகைப்படுத்தி யுள்ளது.
இதையொட்டி, கலெக்டர் தலைமையில் நடந்த கலந்தாய்வு கூட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அனைத்து பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளது.
அதன்படி, உழவர்கரை நகராட்சி, எளிமையான முறையில் மிகக் குறைந்த செலவில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை செயல்படுத்த மத்திய அரசின் நீராதாரத்துறை பரிந்துரைத்த முறையை இணையதளம் www.oulmun.in பதிவேற்றியுள்ளது.
ஆகவே, உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வியாபார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் எளிமையான மழை நீர் கட்டமைப்பை ஏற்படுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி மண்வளம் காக்கவும், நீராதாரத்தை பெருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
வரும் நிதியாண்டில் நகராட்சி உரிமங்கை புதுப்பிக்கவும், நகராட்சி சம்பந்தப்பட்ட அனுமதி பெறவும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தி, அதற்கான தகவலை புகைப்படத்துடன் இணைக்க வேண்டும்.
புதிதாக ஏற்படுத்தும் மற்றும் முன்பு உள்ள மழைநீர் கட்டமைப்பு புகைப்படங்களை 75981 71674 வாட்ஸ் அப் எண்ணில் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், தகவல்களை பெற இளநிலை பொறியாளர் வெங்கடேசனை 94422 91376 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.